மாவட்ட செய்திகள்

சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதிகளில் பா.ம.க. வெற்றி + "||" + In Salem West and Mettur constituencies, the pmk has won. Success

சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதிகளில் பா.ம.க. வெற்றி

சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதிகளில் பா.ம.க. வெற்றி
சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதிகளில் பா.ம.க. வெற்றி
சேலம்:
சேலம், மேற்கு மேட்டூர் தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது.
மேற்கு தொகுதி
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் மேற்கு, மேட்டூர் ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. இதில் மேற்கு தொகுதியில் பா.ம.க. சார்பில் அருள், மேட்டூர் தொகுதியில் பா.ம.க. சார்பில் சதாசிவம் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதே போல மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். மேலும் மேட்டூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் உள்பட மொத்தம் 14 பேர் களம் கண்டனர்.  இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. 
மேற்கு தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே பா.ம.க. வேட்பாளர் அருள் வெற்றி முகத்துடன் இருந்தார். 32 சுற்றுகளின் இறுதியில் 1,05,483 வாக்குகள் பெற்று அருள் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராேஜந்திரன் 83 ஆயிரத்து 984 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் அருள் 21 ஆயிரத்து 499 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,99,605
பதிவானவை-2,15,156
அருள் (பா.ம.க.)-1,05,483
செல்லாதவை-507
சேலத்தாம்பட்டி ராஜேந்திரன்-83,984
அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.)-2,307
தியாகராஜன் (மக்கள் நீதி மையம்)-7,939
நாகம்மாள் (நாம் தமிழர் கட்சி)-10,668
நோட்டா-20
முடிவில், சேலம் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பா.ம.க வேட்பாளர் அருளிடம் மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்திய பாலகங்காதரன் வழங்கினார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 26 பேர் டெபாசிட் இழந்தனர்.
மேட்டூர் தொகுதி
மேட்டூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சதாசிவம், தி.மு.க.வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் இடையே கடும் போட்டி நிலவியது. 2 பேரும் மாறி, மாறி முன்னணியில் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 27 சுற்றுகளின் முடிவில்  பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் 97 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் 96 ஆயிரத்து 399 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் 656 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் சரவணன் வழங்கினார். 
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,86,620
பதிவானவை-2,14,998
செல்லாதவை-427
சதாசிவம் (பா.ம.க.)-97,055
சீனிவாசப்பெருமாள் (தி.மு.க.)-96,399
மணிகண்டன் (நாம் தமிழர் கட்சி)-9,109
அனுசுயா (மக்கள் நீதி மய்யம்)-4,605
ரமேஷ் அரவிந்த் (ேத.மு.தி.க.)-1,874
நோட்டா-2,247
இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்பட 12 பேர் டெபாசிட் இழந்தனர்.