ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தேவராஜ் வெற்றி 1,135 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி அடைந்தார்


ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தேவராஜ் வெற்றி 1,135 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி அடைந்தார்
x
தினத்தந்தி 3 May 2021 3:09 PM GMT (Updated: 3 May 2021 3:09 PM GMT)

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி, தி.மு.க. சார்பில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் க.தேவராஜி, அ.ம.மு.க. சார்பில் தென்னரசுசாம்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ. சிவா, உள்பட 13 ேபர் போட்டியிட்டனர்.

ஜோலார்பேட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன.

தி.மு.க. வெற்றி

இதில் தி.மு.க. வேட்பாளர் தேவராஜ் 89 ஆயிரத்து 277 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1,135 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி அடைந்தார்.

அதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் - 2,39,413.

பதிவான வாக்குகள் - 1,93,869.

ெசல்லாதவை- 255

க.தேவராஜி (தி.மு.க.) - 89,277

கே.சி.வீரமணி (அ.தி.மு.க.) - 88,142

ஏ.சிவா (நாம் தமிழர் கட்சி) -13,305

தென்னரசு சாம்ராஜ் (அ.ம.மு.க.) - 618

ஆர்.கருணாநிதி (சுயே) - 1,065

எஸ்.காளஸ்திரி (சுயே) - 869

வி.சி.சிவக்குமார் (சுயே) - 341

எஸ்.வீரமணி (சுயே) - 217

எச்.வீரமணி (சுயே) - 209

ஏ.வீரமணி (சுயே) - 148

மனிதன் (சுயே) - 142

ஆர். தேவராஜ் (சுயே) - 103

வி.கே. தேவராஜ் (சுயே) - 82

நோட்டா - 9

சான்றிதழ்

அதைத்தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் தேவராஜிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Next Story