மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி + "||" + worker died in accident

காரிமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

காரிமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
காரிமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி.
காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

காரிமங்கலம் அடுத்த பட்டகபட்டியை சேர்ந்தவர் திலகவதன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பட்டகபட்டியில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 
அப்போது பொம்மஅள்ளி பிரிவு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக  பாலக்கோடு நோக்கி சென்ற தனியார் பஸ் திலகவதன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=====