மாவட்ட செய்திகள்

1,250 டன் புழுங்கல்அரிசி + "||" + 1,250 tons of boiled rice

1,250 டன் புழுங்கல்அரிசி

1,250 டன் புழுங்கல்அரிசி
தஞ்சையில் இருந்து நெல்லைக்கு 1,250 டன் புழுங்கல்அரிசி சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இருந்து நெல்லைக்கு 1,250 டன் புழுங்கல்அரிசி சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
சேமிப்பு கிடங்குகள் 
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடை முடிந்து கோடைநெல், முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் பெறப்பட்டு பிள்ளையார்பட்டி, புனல்குளம், பருத்தியப்பர்கோவில், அம்மன்பேட்டை, வீரமரசன்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நெல் மூட்டைகள் அரவைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு ரெயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரவை மில்களுக்கும் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு, அரிசிகளாக மாற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
1,250 டன் புழுங்கல்அரிசி 
இந்த அரிசி மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு பொதுவினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வினியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புழுங்கல்அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
பின்னர் இந்த அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்குரெயிலில் ஏற்றினர். மொத்தம் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல்அரிசி ஏற்றப்பட்டது. பின்பு அரிசி மூட்டைகள் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. 1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2. கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.
3. போக்குவரத்து விதிகளை மீறிய 1,061 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறிய 1,061 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. கடந்த 5 நாட்களில் கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று
கும்பமேளா பகுதியில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
5. முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேருக்கு அபராதம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.