மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கோதுமை நாகம் பிடிபட்டது + "||" + snake

ஈரோட்டில் கோதுமை நாகம் பிடிபட்டது

ஈரோட்டில் கோதுமை நாகம் பிடிபட்டது
ஈரோட்டில் கோதுமை நாகம் பிடிபட்டது.
ஈரோடு
ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகர் குடியிருப்பு பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்கில் 8 அடி நீளமுள்ள கருநாக பாம்பு புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி பாம்பு பிடி வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த குழந்தைகள் செப்டிக் டேங்க் பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று  ஊர்ந்து சென்றதை   அந்த குழந்தைகள் பார்த்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.  
இதையடுத்து பாம்புபிடி வீரர் யுவராஜாவுக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி 6 அடி நீளமுள்ள கோதுமை நாக பாம்பை பிடித்தார். இது கொடூர விஷத்தன்மை கொண்டது என்று கூறிய யுவராஜா, பின்னர் பிடிபட்ட பாம்பை வனச்சரகர் ரவீந்திரனிடம் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிறுவனத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
நிறுவனத்தில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
2. ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்த பாம்பு
ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்த பாம்பு ஒன்று புகுந்துவிட்டது.
3. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு நேற்று பிடிப்பட்டது.
4. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
5. சங்கரன்கோவில் அருகே ஓடும் காரில் டிரைவரின் கால்களை சுற்றிய பாம்பால் பரபரப்பு
சங்கரன்கோவில் அருகே ஓடும் காரில் டிரைவரின் கால்களை சுற்றிய பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.