மாவட்ட செய்திகள்

தோட்ட காவலாளியை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது + "||" + 3 arrested for stabbing plantation guard

தோட்ட காவலாளியை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

தோட்ட காவலாளியை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே தோட்ட காவலாளியை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த வாணிய மல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் தனியார் தோட்டம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போது மணிகண்டன் நேற்று முன்தினம், வாணியமல்லியில் உள்ள தோட்டத்தில் தனது நண்பர்களான பொன்னேரியை சேர்ந்த பிரகாஷ் (32), காமராஜ் (28) மற்றும் சூரியா (20) ஆகியோருடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறில், மணிகண்டனை அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன், சிகிச்iசைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்ட காவலாளி மணிகண்டனை குடிபோதையில் கத்தியால் வெட்டிய அவரது நண்பர்களான மேற்கண்ட 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.