மாவட்ட செய்திகள்

மாரியம்மன் கோவிலில் 2 உண்டியல்கள் திருட்டு + "||" + Theft of 2 bills

மாரியம்மன் கோவிலில் 2 உண்டியல்கள் திருட்டு

மாரியம்மன் கோவிலில் 2 உண்டியல்கள் திருட்டு
தோகைமலை அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் 2 உண்டியல்கள் திருடப்பட்டன.
தோகைமலை
 தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்கள் திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கோவில் உண்டியல்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் மணியம்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் கிடப்பதாக அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உண்டியல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த உண்டியல்களில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.