மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது + "||" + corona

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்து உள்ளது.

328 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 904 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்துள்ளது.
2,105 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 239 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 15 ஆயிரத்து 2 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 125 பேர் இறந்து விட்ட நிலையில், 2,105 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது: தமிழகத்தில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
4. 90 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
மும்பை மற்றும் ஐதராபாத்தில் இருந்து 2¾ லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.