தாளவாடி அருகே பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு


தாளவாடி அருகே பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 4 May 2021 10:25 PM GMT (Updated: 4 May 2021 10:25 PM GMT)

தாளவாடி அருகே பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஈரோடு
தாளவாடி அருகே பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாளவாடி
தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கோடை வெப்பம் காரணமாக வனக்குட்டைகள் அனைத்தும் வறண்டு கிடக்கிறது. வனவிலங்குகள் குடிநீர் தேடி அலைந்தன. இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்தது. மாலை 3 மணியளவில் தாளவாடி அடுத்த சூசைபுரம், மல்லன்குழி, அருள்வாடி, தமிழ்புரம், மெட்டல்வாடி, ஆசனூர், திம்பம் ஆகிய பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
காட்டாறுகளில் வெள்ளம்
 அதன்பின்னர் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நிற்காமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொட்டகாஜனூர்-மெட்டல்வாடி சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தப்படி சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பின. ஆனால் மழைநீர் அணைத்தும் கர்நாடக மாநிலம் சிக்கோலா அணைக்கு சென்றது. அக்னி நட்சத்திரம் தெடங்கிய முதல்நாளே பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்றுவீசிவருகிறது
அந்தியூர்
அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் வனப்பகுதியில் உள்ள கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து 11 மணி வரை கனமழை பெய்தது. இதனால் கொம்புதூக்கி அம்மன் நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலைந்தன. இந்தநிலையில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகள் எளிதில் தாகம் தணித்துக்கொள்ளும். 
இதேபோல் கொடுமுடி, சாலைப்புதூர், ஊஞ்சலூர் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. 

Related Tags :
Next Story