மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Family dispute young lady Suicide by hanging

குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மருதம் கிராமம் பிராமண தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலர்விழி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் மலர்விழியின் சகோதரர் கோபி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு ஆண்டுதான் ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.