கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்க சிறப்பு முகாம்


கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 May 2021 8:07 AM IST (Updated: 11 May 2021 8:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்க சிறப்பு முகாம்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உத்தரவின்படி கொரோனா தொற்று பரவல் காரணமாக தாய்-தந்தையை இழந்த குழந்தைகள் குறித்து தொண்டு நிறுவனம் மூலமாகவோ, தனி நபர் மூலமாகவோ, சமூக செயற்பாட்டாளர்கள் மூலமாகவோ மற்றும் பிற அரசு துறை மூலமாகவோ தகவல்கள் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அக்குழந்தைகளின் மறுவாழ்வு குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்காக அக்குழந்தையை இளைஞர் நீதிச்சட்டம் 2015 விதி 31-ன் படி குழந்தைகள் நலக்குழு முன்பாக ஆஜர்படுத்தி பாதுகாப்பு மற்றும் பராமரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக தாய்-தந்தையை இழந்த ஆதரவற்றவராக மாறி உள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் மூலம் சிறப்பு முகாம் ஆயத்தப்படுத்தப்பட்டு உள்ளது. 

எனவே ஆதரவற்றவராக மாறி உள்ள குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியவர்கள் உடனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கோ, குழந்தைககள் நலக்குழுவுக்கோ அல்லது சைல்டு லைன் 1098 குழந்தை சேவை எண்ணுக்கோ அக்குழந்தைகள் பற்றிய தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக; கிராம கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு கவனம் செலுத்தி குழந்தைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்க அறிவுத்தப்படுகிறது. 
மேற்கண்ட தகவலை சைல்டுலைன் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story