முழுஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 135 பேருக்கு கொரோனா பரிசோதனை


முழுஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 135 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 11 May 2021 12:19 PM GMT (Updated: 11 May 2021 12:19 PM GMT)

வேலூரில் முழு ஊரடங்ைக மீறி சுற்றித்திரிந்த 135 பேருக்கு கொேரானா பரிசோதனை செய்யப்பட்டது.

வேலூர்
வேலூரில் முழு ஊரடங்ைக மீறி சுற்றித்திரிந்த 135 பேருக்கு கொேரானா பரிசோதனை செய்யப்பட்டது. 

வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சுற்றித்திரியும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். 

அதன்பேரில் வேலூர் காமராஜர் சிலை அருகே 2-வது மண்டல உதவிகமிஷனர் பாலு தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வேலூர் வடக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது கார், ஆட்டோக்களில் கொரோனா தடுப்பு விதியை மீறி கூடுதலாக பயணம் செய்தவர்கள் மற்றும் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு அப்பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 அதேபோன்று முககவசம் அணியாதவர்கள், முழுஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாலையில் சுற்றித்திரிந்த நபர்களுக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. கொரோனா தடுப்பு மற்றும் போக்குவரத்து விதியை பின்பற்றாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். 

இந்த சிறப்பு முகாமில் 2 மணி நேரத்தில் 135 பேரின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story