மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க 31-ந்தேதி வரை தடை நீட்டிப்பு தொல்லியல் துறை அறிவிப்பு


மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க 31-ந்தேதி வரை தடை நீட்டிப்பு தொல்லியல் துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 15 May 2021 7:28 AM IST (Updated: 15 May 2021 7:28 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை மூட அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் இன்று (சனிக்கிழமை) வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது எழுந்துள்ள இக்கட்டான சூழல் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள், அருங்காட்சியங்கள் வருகிற 31-ந்தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Next Story