2,750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


2,750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 18 May 2021 6:50 PM GMT (Updated: 18 May 2021 6:50 PM GMT)

கல்வராயன்மலையில் 2,750 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவி்ன் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தி கிராம வனப்பகுதியில் உள்ள நீரோடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 750 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இதேபோல் ஆராம்பூண்டி, வாரம் ஆகிய வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.


Next Story