வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா? போலீசார் தீவிர கண்காணிப்பு


வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா? போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 May 2021 1:53 PM GMT (Updated: 19 May 2021 1:53 PM GMT)

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

நன்னிலம்,

கொரோனா 2-வது அலை பரவல் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என அரசு அறிவித்தது.

அதன்படி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முறையாக இ-பதிவு செய்துள்ளனரா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதையொட்டி மாநில, மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

அபராதம் விதிப்பு

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பதிவு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தினர். இ-பதிவு இல்லாதவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story