திருவாரூர் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் ஒரே நாளில் 9 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
திருவாரூர் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் ஒரே நாளில் 9 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்கள் நலன் கருதி, அவர்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று திருவாரூர் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள வேளாண் ஒருங்கிணைந்த அலுவலகத்தில் இருந்து தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் பணி தொடங்கியது.
9 டன்
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் உதவி இயக்குநர் அப்துல் சாதிக் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இந்த வாகனங்கள் திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 25 காய்கறி வாகனங்கள், 7 பழங்கள் வாகனங்கள் என 32 வாகனங்கள் மூலம் 9 டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் நேரில் விற்பனை செய்யப்பட்டது.

Related Tags :
Next Story