5 மாதங்களில் 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


5 மாதங்களில் 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 May 2021 1:05 AM GMT (Updated: 30 May 2021 1:05 AM GMT)

5 மாதங்களில் 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் கடந்த 28-ந் தேதி வரையில் சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 98 பேர் மீதும், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 29 பேர் மீதும், சைபர் கிரைம் தொடர்பான குற்ற வழக்குகளில் சிக்கிய 10 பேர் மீதும், கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்த 12 பேர் மீதும், ரேஷன் அரிசி கடத்தலில் சிக்கிய ஒருவர் மீதும், ‘ரெம்டெசிவர்’ மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விற்பனை செய்த 2 பேர் மீதும் என 150 குற்றவாளிகள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தால் ஓராண்டு வரை ஜாமீனில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story