ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எழுதிய ‌தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  எழுதிய ‌தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்
x
தினத்தந்தி 31 May 2021 11:06 PM IST (Updated: 31 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எழுதிய ‌தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்

ராணிப்பேட்டை

தமிழகத்தில் பரவி வரும் ‌கொரோனா 2-வது அலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட தடுப்பூசி ஒன்றே சிறந்த வழியாகும். இந்தக் கருத்தை மக்களிடம் வேகமாக கொண்டு செல்ல ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் விழிப்புணர்வு பாடல் எழுதினார். 
அந்த பாடலை பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கிருஷ், அவரது குழுவினர் பாடியிருந்தனர். ராம் கோபி எடிட்டிங் செய்திருந்தார். இதனை ஆற்காடு எல்.ஆர். ஜெகதீசன் தயாரித்திருந்தார்.

இந்த தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. பாடகர் கிருஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், எல்.ஆர். ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story