மது பாட்டில்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
மது பாட்டில்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யாரும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், ஊறல், எரிசாராயம் ஆகியவற்றை தயார் செய்தல், விற்பனை செய்தல் கூடாது. மேலும் மது பாட்டில்கள் விற்பனை, கடத்தல், பதுக்கல் போன்றவற்றிலும் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் எச்சரித்துள்ளார். மேலும் அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வது குறித்து தெரியவந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 9498100690 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்றார்.
Related Tags :
Next Story