திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 5:11 PM IST (Updated: 8 Jun 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சித்துக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 1½ கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் வயலாநல்லூரை சேர்ந்த பென்னின் (வயது 24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.

Next Story