இடத்தகராறில் 3 பேர் மீது வழக்கு
விக்கிரமசிங்கபுரம் அருகே இடத்தகராறில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம், ஜூன்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பொன்னிநகர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 41). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த வள்ளலார் தெருவை சேர்ந்த சிவனு பாண்டியன் மகன் முருகையா பாண்டியனுக்கும் (27) இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமிநாராயணனை, முருகையா பாண்டியன் மற்றும் இவரது ஆதரவாளரான அகஸ்தியர்பட்டி நர்மதா தெருவை சேர்ந்த கண்ணன் மகன் உலகநாதன் (36), மன்னார்கோவில் ரவிராம்நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரூபன் (32) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த லட்சுமி நாராயணன் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story