வாழ்வாதாரம் தந்த மக்களுக்கு தக்காளி வழங்கிய வியாபாரி
30 ஆண்டுகளாக வாழ்வாதாரம் தந்த மக்களுக்கு வியாபாரி இலவசமாக தக்காளி வழங்கினார்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று வெளியில் செல்லாமல் தேவை ஏற்படும்போது மட்டும் அத்தியாவசிய பொருட்களை வாங்கமட்டும் வெளியில் சென்று வருகின்றனர். மேலும், இதுபோன்ற ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மார்க்கெட் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக தக்காளி மொத்த விற்பனை மற்றும் காய்கறி கடை வைத்து நடத்தி மணிகண்டன் தங்களுக்கு வாழ்வாதாரம் அளித்த மக்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் உதவ கர்நாடக மாநிலத்தில் இருந்து 15 டன் தக்காளியை கொள்முதல் செய்து லாரிகள் மூலம் ராமநாதபுரம் கொண்டு வந்துள்ளார். இந்த தக்காளிகளை 2 கிலோ கொண்ட பைகளாக போட்டு ஆட்டோக்களில் தான் மற்றும் தனது நண்பர்கள் மூலம் வீடு வீடாக சென்று இலவசமாக வினியோகம் செய்து வருகிறார்.
Related Tags :
Next Story