சட்டம் ஒழுங்கை கண்காணிக்க போலீசார் இரு சக்கர வாகன ரோந்து
கோவையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கஇரு சக்கர வாகன ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம் தொடங்கி வைத்தார்.
கோவை
கோவையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கஇரு சக்கர வாகன ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம் தொடங்கி வைத்தார்.
போலீசாருக்கு ரோந்து வாகனம்
காவலன் செயலி மூலம் கோவை புறநகர் பகுதியில் அதிக புகார் வரக்கூடிய போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக சென்று விசாரிக்கும் வகையிலும், குற்றங்களை தடுக்கவும் 10 இரு சக்கர ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ரோந்து வாகனத்தில் எச்சரிக்கை ஒலி, விளக்குகள் மற்றும் அறிவிப்பு வெளியிடும் மைக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோந்து வாகனங்களை போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு போலீசாருக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை வழங்கினார். பின்னர் ரோந்து பணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறியதாவது:-
கோவையில் அதிக புகார் வரும் முக்கிய போலீஸ் நிலையங்களுக்கு சட்டம் ஒழுங்கை கண்காணிக்க 10 இரு சக்கர ரோந்து வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.
விரைவில் கோவை மாவட்டத்திற்கு 50 இரு சக்கர ரோந்து வாகனங் கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதுபோன்று பெண் போலீசாருக்கும் ரோந்து வாகனம் வழங்கப்பட்ட உள்ளது.
36 வழக்குகள்
கோவையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் குற்றங்களுக்காக 36-க்கும் மேற்பட்ட வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுவரை கர்நாடக மாநிலத்தில் இருந்து மது விற்பனைக்கு கொண்டு வந்த 4 லாரிகள் பிடிபட்டு, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. புறநகரில் சாராயம் காய்ச்சுவது, கேரளாவில் இருந்து கள் விற்பனை செய்வது போன்றவை தடுக்கபட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story