ஆலங்குளம் அருகே புதிய கால்வாய் அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
ஆலங்குளம் அருகே புதிய கால்வாய் அமைப்பதற்கு, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஆலங்குளம், ஜூன்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் பெரிய குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு காவலாகுறிச்சி குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், புதிய கால்வாய் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீராணத்தில் இருந்து காவலாகுறிச்சி வரை 4,600 மீட்டர் தொலைவுக்கு புதிய கால்வாய் அமைக்க சிற்றாறு வடிநில அதிகாரிகள் திட்ட அறிக்கை தயார் செய்தனர்.
இதனை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது நெல்லை திட்டங்கள் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் பத்மா, தென்காசி உதவி பொறியாளர்கள் மோகன், ராஜசிம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story