திருப்புவனம்,
பூவந்தி அருகே இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பரமாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருமாஞ்சோலையில் உள்ள ஒரு சுவீட்ஸ் கடையில் பிள்ளைகளுக்கு திண்பண்டம் வாங்கிவிட்டு ரோட்டை கடந்தார். அப்போது சிவகங்கையிலிருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக பரமாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இவருக்கு தலையின் பின்புறம் மற்றும் இடது முழங்காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பரமாண்டி பூவந்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, கார் டிரைவர் லெனின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.