தாசில்தார் முதல்சிப்பந்தி வரை பணிபுரியும் பகுதிகளில் தங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கலெக்டர் முருகேஷ் உத்தரவு


தாசில்தார் முதல்சிப்பந்தி வரை  பணிபுரியும் பகுதிகளில் தங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கலெக்டர் முருகேஷ் உத்தரவு
x

தாசில்தார் முதல்சிப்பந்தி வரை அனைவரும் தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் தங்கி சேவை செய்யவேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கலசபாக்கம்

ஜமாபந்தி

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் கலசபாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய மூன்று பிர்காவிற்கு உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி ஆன்லைன் மூலம் வரும் மனுக்களை ஆய்வு செய்தார். அப்போது ஆன்லைன் மூலம் வரும் மனுக்களை முறையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், சிப்பந்திகள் அனைவரையும் அழைத்து பேசினார். அப்போது நீங்கள் அனைவரும் பணிபுரியும் பகுதிகளில் தங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டார். இதற்கு அனைவரும் வெளியூர்களில் இருந்து வருவதாக தெரிவித்தனர். 

தங்கி பணிபுரிய வேண்டும்

உடனே நாம் அனைவரும் மக்கள் சேவை செய்ய அமர்த்தப்பட்டுள்ளோம். நீங்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு குடியிருப்பு பகுதிகளில் தங்கி பணிபுரிய வேண்டும். நான் அடுத்த முறை வரும்போது அனைவரும் தங்கள் பகுதியில் தங்கியிருப்பதாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தர முடியும் என்று கலெக்டர் கூறினார்.

Next Story