மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு


மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 30 Jun 2021 9:57 PM IST (Updated: 30 Jun 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் முத்துலட்சுமி (வயது 19). இவர் சம்பவத்தன்று மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த இரும்பு கம்பியை தூக்கியதாக கூறப்படுகிறது.  மேலே இருந்த மின்ஒயரில் கம்பி உரசியதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story