மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது + "||" + 3 arrested in petrol punk robbery case

பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
சின்னசேலம் அருகே பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் பிரகாஷ்ராஜ்(வயது 22). இவர் சம்பவத்தன்று  கச்சிராயப்பாளையம்-சின்னசேலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை திடீரென ஹெல்மெட்டால் தாக்கி பணப்பையை பறித்து சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். பிரகாஷ்ராஜை தாக்கிய மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படை போலீசார் சின்னசேலத்தை அடு்த்த கனியாமூர் கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி மாமந்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமதுரபிக் மகன் முகமது ராஷூத்(வயது 21), பசுங்காயமங்கல ரோடு பகுதியைச் சேர்ந்த கேசவபிள்ளை மகன் நிதிஷ்குமார் (19), தியாகதுருகத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார்(20) என்பதும் பெட்ரோல் பங்க் ஊழியர் பிரகாஷ்ராஜை தாக்கி அவரது பணப்பையில் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ கொள்ளையடித்து சென்றதும், கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விதவைப் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
கரூர் அருகே இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் அள்ளி சென்றனர்.
2. வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
3. திருக்கோவிலூர் தியாகதுருகத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் நகை பணம் கொள்ளை
திருக்கோவிலூர் தியாகதுருகத்தில் தனியார் கம்பெனி ஊழியர் உள்பட 2 பேரின் வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
4. தண்ணீர் கேட்பதுபோல் நடித்து விவசாயி வீட்டில் 7½ பவுன் தங்கச்சங்கிலி கொள்ளை
தண்ணீர் கேட்பதுபோல் நடித்து விவசாயி வீட்டில் 7½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
5. உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகை அபேஸ்
அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.