மாவட்ட செய்திகள்

சிற்பி பரிதாப சாவு; 2 நண்பர்கள் படுகாயம் + "||" + Accident

சிற்பி பரிதாப சாவு; 2 நண்பர்கள் படுகாயம்

சிற்பி பரிதாப சாவு; 2 நண்பர்கள் படுகாயம்
சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியதில் சிற்பி பலியானார். அவருடன் சென்ற 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் விளாரிக்காட்டை சேர்ந்தவர்கள் காத்தலிங்கம் (வயது 24) அருண்குமார் (20). இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள கோவில்களில் சிற்ப வேலை பார்த்து வந்தனர். கொரோனா காலம் என்பதால் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இவர்கள் பனம்பட்டிக்கு அவரது நண்பர் கவியரசை (25) பார்க்கச் சென்றனர்..பின் அவர்கள் 3 பேரும் சேர்ந்து பனம்பட்டியிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சாக்கோட்டை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை காத்தலிங்கம் ஓட்டிச் சென்றார்.மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். மோட்டார் சைக்கிள் கருநாவல்குடி பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பாலத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.இதை காத்தலிங்கம் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அருண்குமார் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கவியரசு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது; சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது டிரைவர்கள் உள்பட 3 பேர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. மேலும் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. தாறுமாறாக ஓடிய கார் மோதி சிறுமி படுகாயம்
சிங்கம்புணரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக குடிபோதையில் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. விபத்தில் விவசாயி பலி
கொட்டம்பட்டி அருகே விபத்தில் விவசாயி பலியானார்.
4. கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு
மேலூர் அருகே கார் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
5. மோட்டார் சைக்கிள் மோதியது; சாலையை கடந்தவர் சாவு
செட்டிநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையை கடந்தவர் இறந்தார்.