மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் சிறுமி கடத்தல் சிறுவனுக்கு போலீஸ் வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நகரை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வந்துள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சிறுமியின் தாய் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தனது வீட்டில் இருந்த துணிமணிகளை ஒரு பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இதனை அவரது பாட்டி தடுத்துள்ளார். அதையும் மீறி சிறுமி விரைந்து சென்று தூரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் ஏறி சென்று விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய், மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை, 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்திய சிறுவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story