‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு


‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு
x
தினத்தந்தி 12 July 2021 2:47 PM GMT (Updated: 12 July 2021 2:47 PM GMT)

‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு.

சென்னை,

சசிகலா தினந்தோறும் தொலைபேசி வழியாக தொண்டர்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில் செங்கல்பட்டை சேர்ந்த வெங்கடேசன், எடப்பாடியை சேர்ந்த முகமது, கார்த்திக், திருச்சியை சேர்ந்த மூர்த்தி உள்ளிட்டோருடன் சசிகலா நேற்று பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-

தொண்டர்கள் நினைத்தது போலவே கட்சியை நல்லபடியாக கொண்டு வருவேன். எனவே தொண்டர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கட்சியை நல்லபடியாக கொண்டுவந்து, அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை எதிர்காலத்தில் அமைப்போம். கட்சி நன்றாக இருக்கவேண்டும். எல்லாருமே ஒருதாய் வயிற்று பிள்ளைகள் தான். எனவே நமது இலக்கை அடைய ஒற்றுமையாக உழைக்கவேண்டும்.

கட்சியை காப்பாற்ற கட்டாயம் நான் வருவேன். தொண்டர்களின் மனக்குமுறலை சரிசெய்ய நான் கட்டாயம் வந்தாக வேண்டும். எனவே ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் சென்று, அதனைத்தொடர்ந்து தொண்டர்களை சந்திக்க புறப்படுவேன். இப்போது என் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. தொண்டர்கள், தமிழக மக்களின் வேண்டுதலால் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். தொண்டர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதே நிம்மதியாக இருக்கிறது. தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன். எனவே தொண்டர்களுக்காக நிச்சயம் நான் வருவேன். ஊரடங்கு முடிவதற்காக தான் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

Next Story