வலங்கைமானில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


வலங்கைமானில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2021 9:28 PM IST (Updated: 12 July 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குலாம்மைதீன் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் முத்துகுமரன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் புவனேஷ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் நகர தலைவர் செந்தில்வேலன் நன்றி கூறினார்.

Next Story