பணம் பாக்கி விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தலைமறைவு: ரூ.12 லட்சம் கேட்டு ஊழியர் கடத்தல்; 4 பேர் கைது
பணம் பாக்கி விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தலைமறைவு: ரூ.12 லட்சம் கேட்டு ஊழியர் கடத்தல்; 4 பேர் கைது.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரவள்ளூர், ராம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 69). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் தற்போது சுதாகர் என்பவருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இடம் வாங்கி விற்பனை செய்தது தொடர்பாக தமிம் அன்சாரி என்பவருடன் சுதாகருக்கு பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் தமிம் அன்சாரிக்கு சுமார் ரூ.12 லட்சம் வரை பாக்கி தர வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிம் அன்சாரி சுதாகரிடம் கேட்டு வந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவானார்.
இதனால் சுதாகர் நிறுவனத்தின் ஊழியரான முதியவர் வேதநாயகத்தை கடந்த 10-ந் தேதி தனது கூட்டாளிகளுடன் தமிம் அன்சாரி காரில் கடத்திச் சென்றார். கிழக்கு கடற்கரைச்சாலையில் அடைத்து வைத்து பணத்தை தரக்கோரி வேதநாயகத்தை மிரட்டியதுடன், அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டை பறித்து அதிலிருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்து விட்டு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வேதநாயகம் கொடுத்த புகாரின் பேரில், திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊரப்பாக்கத்தை சேர்ந்த அன்சர் பாஷா (29), இதயதுல்லா (45), கார்த்திக் (33) மற்றும் பாண்டியராஜ் (49) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான தமிம் அன்சாரியை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story