கொங்கு நாடு விவகாரத்தில் வளமான தமிழ்நாடு, வலிமையான இந்தியா என்ற எண்ணத்தில் செயல்படுவோம் ஜி.கே.வாசன் எம்.பி. தகவல்
கொங்கு நாடு விவகாரத்தில் வளமான தமிழ்நாடு, வலிமையான இந்தியா என்ற எண்ணத்தில் செயல்படுவோம் ஜி.கே.வாசன் எம்.பி. தகவல்.
சென்னை,
காமராஜரின் பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜர் திருஉருவப்படத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் கொரோனா நோய் தடுப்பு கோட்பாடுகளை கேட்டு 3-வது அலையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு அளித்து வருகிறோம். வரும் நாட்களில் 100 சதவீதம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து தங்குதடையின்றி, தாமதமின்றி தடுப்பு ஊசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நீர் பிரச்சினை, மேகதாது ஆகியவை தமிழகத்தின் ஒட்டு மொத்த பிரச்சினை. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையாகும். தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்துக்கு துணை நிற்கிறோம். முக்கிய பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சிகளையும் அரசு கூட்ட வேண்டும். விவசாயம் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் விவசாய பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் பிடிவாதத்தை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக டெல்லி செல்லும் குழுவின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். கொங்கு நாடு அறிவிப்பை பொறுத்தவரையில், வளமான தமிழ்நாடு, வலிமையான இந்தியா, இதுதான் மக்களின் எண்ணம். அந்த எண்ணத்திற்கு ஏற்ப த.மா.கா. தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story