அறந்தாங்கியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை-ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அறந்தாங்கியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை-ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 July 2021 11:45 PM IST (Updated: 17 July 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி:
வீட்டின் கதவு உடைப்பு 
அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் வசித்து வருபவர் ராதா (வயது 35). இவரது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ஸ்வேதா ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி அதே பகுதியில் வசித்து வந்த ராதாவின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு ராதா, ஸ்வேதா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளனர். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 
நகை-பணம் திருட்டு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதா, ஸ்வேதா ஆகியோர் வீட்டிற்கு ள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் செயின், 3 நெக்லஸ், 2 கை செயின் மொத்தம் 10 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story