சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லாகோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா (வயது 50). இந்த நிலையில் நேற்று காலை டீக்கடையில் வசந்தா இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் வசந்தாவிடம் டீ வாங்கி குடித்தனர். பின்னர் அவரிடம் பேச்சு கொடுத்தவாறே மர்ம ஆசாமி ஒருவன் வசந்தா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். இது குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசில் வசந்தா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்த 3 பேரை தேடி வருகின்றனர்.