வாணியம்பாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2021 8:10 PM IST (Updated: 21 July 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி

வாணியம்பாடி பஷீராபாத் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஷபீக் அஹமத். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பணிகள் மேற்கொண்டு வந்துள்ளார். இதனை அறிந்த அந்தப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியில் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story