மாவட்ட செய்திகள்

வயல் பகுதியில் திடீர் தீ + "||" + Sudden fire in the field

வயல் பகுதியில் திடீர் தீ

வயல் பகுதியில் திடீர் தீ
நெல்லையில் வயல் பகுதியில் திடீரென தீப்பற்றியது.
நெல்லை:
நெல்லை ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் பின்புறம் வயல் பகுதி அமைந்துள்ளது. நேற்று இரவு இங்குள்ள மரங்கள் மற்றும் காய்ந்த செடிகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். யாரோ மர்ம நபர்கள் தீவைத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.