இரும்பேடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
இரும்பேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
இரும்பேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிைய அடுத்த இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தரணிவெங்கட்ராமன். ஊராட்சி மன்ற கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும்.
ஒவ்வொரு கூட்டத்திலும் பங்கேற்கும் துணைத் தலைவர் கே.சரவணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இரும்பேடு ஊராட்சியில் அரிகரன்நகர், பழங்காமூர், ராஜீவ்காந்திநகர், கங்காநகர், காமராஜ்நகர், தர்கா, இரும்பேடு, பூண்டி, மேலேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கிராமத்தில் தான் தற்போது ஆரணியில் செயல்பட்டு வந்த மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
ஊராட்சியில் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் ஆகியவை முறையாக இல்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.
சாலை மறியல்
இரும்பேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவரையும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி பொது மக்களும் திரண்டு வந்து இரும்பேடு கூட்ரோடு இந்திராகாந்தி சிலை அருகே தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் கும்பலாக நின்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்கிறோம், சாலை மறியலை கைவிட்டு ஓரமாக செல்லுங்கள், எனப் போலீசார் கூறினர்.
அதையேற்ற பொதுமக்கள் மறியலை ைகவிட்டு சாலையோரம் வந்து நின்றனர். பொதுமக்களிடம், ஊராட்சி மன்ற தலைவர் தரணிவெங்கட்ராமன் ேபச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வார்டு உறுப்பினர்கள் பிரகாஷ், காளிதாஸ், சர்தார், பாலகிருஷ்ணன், சசி ஆகியோரும் பங்கேற்றனர்.
நான் என்ன செய்வது?
ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், இதுவரை ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் பங்கேற்கும் துணைத் தலைவருடன் உறுப்பினர்கள் சேர்ந்து தீர்மானங்களுக்கு கையெழுத்திடாமல் இருக்கிறார்கள். வளர்ச்சிப் பணிகளை செய்து தருமாறு பொதுமக்கள் என்னிடம் கேட்டு வந்தால் நான் என்ன செய்வது? எனது பணியை நான் செய்கிறேன்.
ஆனால் துணைத்தலைவர், உறுப்பினர்கள் யாரும் வளர்ச்சிப்பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, என்றார்.
அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், எதுவாக இருந்தாலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து பேசுங்கள், பொதுமக்களின் குறைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள், என்றார்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறியதும், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். சாலை மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story