ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
கோவை
கொரோனா தொற்று பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது. எனவே தற்போது தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கிடையே முன் களப்பணியாளர்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய துறை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்களுக் கான சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
முகாமில் 250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு வெளியூரில் இருந்து கோவை வந்தவர்கள் மற்றும் கோவையில் இருந்து வெளியூர் செல்ல வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story