மாவட்ட செய்திகள்

வேன் மோதி குழந்தை பலி + "||" + Child killed in van collision

வேன் மோதி குழந்தை பலி

வேன் மோதி குழந்தை பலி
வேன் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்,ஜூலை.
விருதுநகர் அருகே உள்ள உப்போடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 35). இவரது ஒரு வயது பெண் குழந்தை சரண்யா ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த காய்கறி வேன் மோதியதில் குழந்தை சரண்யா பரிதாபமாக உயிரிழந்தாள்.
காரை ஓட்டி வந்த டிரைவர் வேனை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து சொக்கலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வேனை ஓட்டி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த சசிகுமரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்கச் செய்தது.