மணப்பாறை, திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது; 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
மணப்பாறை, திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து, மொத்தம் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை, ஜூலை.24-
மணப்பாறை மோர் குளம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார்(வயது 22), ஜெனிபர்பகவதி(19) மற்றும் 15 வயது சிறுவனை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மகாலட்சுமி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோல் திருச்சி துரைசாமிபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக மணல்வாரிதுறைரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் (52), மணிகண்டன் (23) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (21) கஞ்சா விற்பனை செய்ததாக காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். ைகது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மொத்தம் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story