மாவட்ட செய்திகள்

பழுதான ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் + "||" + The junk ration shop needs to be refurbished

பழுதான ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்

பழுதான ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்
பழுதான ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்.
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே உள்ள புஞ்சைக்கொல்லியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு புஞ்சைக்கொல்லி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்வது வழக்கம். இந்த நியைில் ரேஷன் கடை உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. 

அதன் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், மழைநீர் கசிகிறது. இதனால் அங்கு இருப்பு வைக்கப்பட்டு உள்ள அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி வருகின்றன. மேலும் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களும், வேலை செய்யும் ஊழியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இது தவிர கட்டிடத்துக்கு அருகில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் மரங்கள் நிற்கின்றன. எனவே அந்த மரங்களை வெட்டி அகற்றி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.