புதுவையில் மேலும் 113-பேருக்கு கொரோனா
புதுவையில் மேலும் 113-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை,
புதுவையில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பைக் கண்டறிய 5,124 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுச்சேரி - 75, காரைக்கால் - 13, ஏனாம் - 5, மாஹே - 20 பேர் என மொத்தம் 113 (2.21 சதவீதம்) பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,791 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story