மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் சாவு + "||" + Elderly man dies after drinking poison near Vedaranyam

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் சாவு

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் சாவு
வேதாரண்யம் அருகே விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் வாடிவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது70). விவசாய கூலித்தொழிலாளி. இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு முதலுவி சிகிச்சை பிறகு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.