காவலர் பணிக்கான 2-வது நாள் உடற்தகுதி தேர்வில் 409 பேர் பங்கேற்பு


காவலர் பணிக்கான 2-வது நாள் உடற்தகுதி தேர்வில் 409 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 July 2021 10:13 PM IST (Updated: 27 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

2-வது நாள் உடற்தகுதி தேர்வில் 409 பேர் பங்கேற்பு

வேலூர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்து வருகிறது. 

முதல் நாளான நேற்று முன்தினம் 413 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடைய அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து உடற்தகுதி தேர்வுகள் நடந்தன. 

நேற்று 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்ள 502 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 409 பேர் வந்திருந்தனர். அவர்களில் 76 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 333 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story