புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது
விருதுநகர் அருகே புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் பாண்டியன் நகர் போலீசார் ரோந்து சென்றபோதுஅங்கு பெட்டிக்கடை வைத்திருக்கும் குருசாமி (வயது 68), என்பவர் அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார், குருசாமியை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று இ.சொக்கலிங்காபுரத்தில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்ற போது அங்கு பெட்டிக்கடை வைத்திருக்கும் செல்வி (35) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட 13 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் செல்வியை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story