ஆறுமுகநேரியில் மதுவிற்ற வாலிபர் கைது


ஆறுமுகநேரியில் மதுவிற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 5:22 PM IST (Updated: 29 July 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன்  மற்றும் போலீசார் வடக்கு பஜாரில் ரோந்து சென்றனர். வடக்கு பஜார் முத்தாரம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் ஆறுமுகநேரி பெரியான்விளை சின்னத்தம்பி மகன் செல்வம்(வயது23) என்றும், அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்று வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story