மாவட்ட செய்திகள்

வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது + "||" + 2 arrested for burglary

வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி 6-வது குறுக்கு தெரு மற்றும் 7-வது குறுக்குத் தெருவில் செல்வராஜ், கலாவதி மற்றும் தனசேகர், பவுணம்பாள் ஆகியோரது வீடுகளில் இருந்த பணம், நகை மற்றும் பத்திரங்களை 2 பேர் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் வாகன சோதனையின் போது 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த கமலஹாசன், மாரிமுத்து என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் செங்குந்தபுரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் ஓட்டை பிரித்து பணம், நகைகளை திருடியது அவர்கள்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து கமலஹாசன் (வயது 46), மாரிமுத்து (30) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2. ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடி கைது
ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
3. ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது
மதுரையில் பட்டா மாற்றம் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
4. ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடி கைது
ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.