1,330 திருக்குறளை ஒப்புவித்து சிறுவர்கள் சாதனை வி.ஜி.சந்தோஷம் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார்


1,330 திருக்குறளை ஒப்புவித்து சிறுவர்கள் சாதனை வி.ஜி.சந்தோஷம் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார்
x

தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 1,330 திருக்குறளை ஒப்புவித்து சிறுவர்கள் சாதனை வி.ஜி.சந்தோஷம் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார்

சென்னை, 

திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொழில் அதிபரும், உலக தமிழ் சங்கத்தின் நிறுவனருமான வி.ஜி.சந்தோஷம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் பகுதியை சேர்ந்த ஆபிராம் ஜோஸ் (வயது 10) என்ற சிறுவன் 33.08 நிமிடங்களிலும், அருணிஷ் ஷேண்டோ (7) என்ற சிறுவன் 25.47 நிமிடங்களிலும் 1,330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புத்து சாதனை நிகழ்த்தினர். இதையடுத்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறுவர்களின் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். மனப்பாடமாக திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை பாராட்டி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார்.

Next Story